கவினுக்கு அடுத்து பணப்பெட்டியை எடுத்தது ரம்யாவா-கேப்ரில்லாவா? யாரும் எதிர்ப்பாராத திருப்பத்துடன் பிக்பாஸ்!

Report
5Shares

சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் 4 சீசன் தற்போது இறுதி வாரத்தில் இருக்கிறது. வரும் 17ல் வெற்றியாளர் யார் என்று கமல்ஹாசன் முன்னிலையில் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 3 சீசனில் கடைசி வாரத்தில் பிக்பாஸ் கொடுத்த பெட்டியில் இருக்கும் 5 லட்சத்தினை கவின் எடுத்து கொண்டு இறுதி போட்டியில் இருந்து விலகி வீட்டினைவிட்டு வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

வாய்ப்பை பயன்படுத்தி நடிகர் கவின் வெளியேறியது போல் இந்த 4வது சீசனிலும் ஒருவர் பெட்டியில் இருக்கும் பணத்தினை எடுத்து செல்லவிருக்கிறார். அது வேறு யாரும் இல்லை நடிகை ரம்யா பாண்டியன் என்று கூறப்பட்டு கசிந்துள்ளது.

ஆனால், இன்றைய மூன்றாவது பிரமோவில் கேபி பணப்பெட்டியை எடுத்துவிட்டு அழுவது போன்ற காட்சி வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் பெட்டியை எடுத்தார் அதில் எவ்வளவு இருந்தது என்பது நிகழ்ச்சி பார்த்தால் தெரியும்!