இந்த இளம் சிங்கருடன் காதலா? உண்மையை உடைத்த சூப்பர் சிங்கர் சிவாங்கி!

Report
11Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பிரபலங்களை சினிமாவில் அறிமுகப்படுத்தும் பங்கினை தொலைக்காட்சி சேனல்கள் செய்து வருகிறது. அதில் மிகப்பெரிய பிளாட்பாரத்தினை சினிமாவிற்கு கொடுத்து வருகிறது பிரபல தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

அந்தவகையில் சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் சீசனில் பிரபலமானவர் சிவாங்கி. சிங்கராக இருந்து காமெடி செய்தும் கலக்கி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

மேலும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார் சிவாங்கி.

இந்நிலையில், சிவாங்கி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் காதல் பற்றி பதிலளித்துள்ளார். நீங்கள் சிங்கர் சாமுடன் காதலில் இருக்கிறீர்களா என்று கேட்டிருந்தனர்.

இதை முற்றிலும் ஏற்காமல் சாம் என்னுடைய நண்பர் பாய் பெஸ்டி போன்று காதல் என்றெல்லாம் இல்லை என்று சிரிப்புடன் பதிலளித்துள்ளார் சிவாங்கி.