
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்து வாரிசு நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா. ஆரம்பகாலத்தில் பெரிதாக பேசப்படாத நடிகையாக இருந்து தற்போது பேசப்பட்ட நடிகையாக இருந்து வருகிறார்.
பிக்பாஸ் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அதன்பின் லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் நடைபெற்ற நாள் முதலே பல பிரச்சனைகளை சந்தித்து, பின் அவரின் சுயரூபம் தெரிந்து பீட்டர் பாலை பிரிந்து மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வனிதா தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் யுடியூப் என செம்ம பிஸியாக இருந்து வருகிறார்.
இதனிடையே இவரின் முதல் கணவர் குறித்து தான் பார்க்கவுள்ளோம், ஆம் ஆகாஷ் என்பவர் தான் வனிதா விஜயகுமாரின் முதல் கணவர். இவர் தாமிரபரணி, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பீட்டர் பால் பெயரை பச்சை குத்தியதை எடுத்துவிட்டு, வேறொரு டேட்டூவை போட்டு, இனி எந்த நாதாரி பெயரையும் பச்சை குத்தமாட்டேன் என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.