சித்துவை நிம்மதியாக இருக்கவிடாமல் கொடுமை படுத்தினான்! ஹேமந்தின் சுயரூபத்தை உடைத்த சித்ராவின் நண்பர்!

Report
87Shares

கடந்த 2020 டிசம்பர் 9 காலை சின்னத்திரை சீரியல் பாண்டியன் ஸ்டோரின் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை அளித்தது. தற்கொலை தொடர்பாக பலரிடன் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது.

சித்ராவின் கணவர் தான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது என அவரின் மேல பல புகார்கள் அளிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சித்ரா தற்கொலை குறித்து அவரின் நெருங்கிய நண்பர் ரோஹித் பல திடுக்கிடும் தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சித்ரா மரணத்தின் போது அதற்கு முன் தான் எனக்கு திருமணமாகியது. அதனால் தான் நான் வெளியில் வரமாலும் பேசாமலும் இருந்தேன் என்று ரோஹித் கூறியுள்ளார்.

மேலும், சித்ராவின் மரணத்திற்கு அவர்தான்(ஹேமந்த்) காரணம். அவ்வளவு கொடுமைகளை கொடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக நடனம் ஆடியதும், சீரியலில் நெருக்கமான முதலிரவு காட்சிகள் ஹேமந்தை கொடுமைக்காரனாக காட்டியது.

அவனை பற்றி தெரிந்தும் விடாமல் இருந்ததற்கு சித்ரா ஹேமந்த் மீது வைத்திருந்த காதல் தான். சித்ராவிற்கு விர்ஜினிட்டி பரிசோதனை எடுக்க மருத்துவரை ஹேமந்த் கேட்டான். இதனால் அவனுக்கு சித்ராவிடம் பல சந்தேகங்கள் இருந்து கொடுமைப்படுத்தி வந்தான் எனவும் கூறியுள்ளார்.

நிறைய பெண்களை காதலித்தும், தொடர்பில் இருந்தும் வந்துள்ளான் ஹேமந்த். லாக்டவுன் சமயத்தில் நன்றாக பார்த்துக்கொண்டான், சீரியல் படப்பிடிப்பு ஆரம்பித்ததுதான் பெரிய பிரச்சனையாக சித்ராவிற்கு மாறியது.