இறுக்கமான குட்டை ஆடையில் எல்லைமீறும் ஆர்யாவின் முன்னாள் காதலி சீதா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1702Shares

தொலைக்காட்சி சேனல்கள் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் டிஆர்பிக்காக எல்லைமீறிய செயலில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆர்யாவின் திருமணத்திற்காக பெண் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகியது.

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் 16 இளம்பெண்கள் போட்டியிட்டு கடைசியில் மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஆசையை உடைக்கும் வண்ணம் ஆர்யா வேண்டாம் என்று முடிவெடுத்து தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பெரும் வரவேற்பையும் ஆர்யாவின் அன்பையும் பிடித்த இளம்பெண் தான் சீதாலட்சுமி ஹரிஹரன். ஆர்யாவுடன் மிகவும் அன்போடும் அரவணைப்போடும் பழகி மக்களின் ஆதரவையும் பெற்றார். கேரள பெண்ணாக இருந்த சீதாலட்சுமி இந்நிகழ்ச்சிக்கு பிறகு தன் சொந்த ஊருக்கே சென்றார்.

இதையடுத்து மாடலிங்கில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கு பெற்றும் வருகிறார். அதற்காக சில ஆடைவடிவமைப்பினையும் கற்று வருகிறார். மேலும் படங்களிலும் சீரியலிலும் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம் சீதாலட்சுமிக்கு.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து சில போட்டோஹுட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவார். அந்தவகையில் சமீபத்தில் குட்டையான ஆடையணிந்து இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.