நான் அந்தமாதிரி பொண்ணு இல்லை! 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை டெலீட் செய்த பிக்பாஸ் ஷிவானி

Report
601Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல கோடி பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தமிழில் கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வந்தது பிக்பாஸ். இந்த வருடம் கொரானா வைரஸால் லாக்டவுனால் தள்ளி சென்று கடந்த 110 நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த வாரத்துடன் முடிந்தது. இதில் ஆரி வெற்றி பெற்றார். இந்த சீசனில் சின்னத்திரை நடிகை சிவானியும் போட்டியாளராக களமிறங்கினார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான பாலாஜியுடன் இணைந்து நடந்து கொண்டதை வைத்து ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். வீட்டிற்கு வந்த அவரின் அம்மாவும் கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் ஒரு முடிவினை மேற்கொண்டுள்ளார் ஷிவானி. தற்போது சமூக வலைதளங்களில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளாராம் ஷிவானி நாராயணன். அதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அனைத்து கவர்ச்சி புகைப்படங்களை நீக்கி விட்டாராம்.

இதற்கு காரணம், காதல் வலையில் சிக்கிய தன் மகளை கண்டித்த தாயார், சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடும் போது எங்கே போனார்? என ரசிகர்களும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.

ஒருவேளை அதை எல்லாம் தெரிந்துகொண்டு தான் சிவானி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள கிட்டத்தட்ட 100 கவர்ச்சி புகைப்படங்களை நீக்கி விட்டார் என பேச்சுகள் எழுந்துள்ளன.

மேலும் இனி அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட மாட்டேன் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் தெரிவித்துள்ளாராம் ஷிவானி.