ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இணையத்தை அதிரவைத்த அனுஷ்கா செட்டி.. வைரல் புகைப்படம்..

Report
234Shares

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய உழைப்பால் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை அனுஷ்கா. ஆரம்பத்தில் க்ளாமர் பிகினி என எல்லைமீறி நடித்து வந்த அனுஷ்கா தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க முடிவெடுத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர்யாவின் சைஸ் ஜீரோ படத்திற்காக தனது உடல் பருமனை அதிகப்படுத்திய அனுஷ்கா, இதனால் பல படவாய்ப்புகளை இழந்து ஆள் எங்கே சென்றார் என்ற கேள்வியை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வந்தார். தற்போது தெலுங்கில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற படத்தை இயக்கிய பி.மகேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அனுஷ்கா.

இந்த படத்திற்காக தனது உடல்மொழியை மாற்றி நடிக்கிறாராம். வித்தியாசமான கதையில் உருவாகும் இந்த படத்தில் இதற்கு முன்பு பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனுஷ்காவை பார்க்கலாம் என்று டைரக்டர் மகேஷ் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தை யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கிறது.இந்நிலையில், முகம் முழுதும் கூந்தலை படற விட்டபடி க்ளோஸ்அப்பில் ஒரு செல்ஃபியை க்ளிக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வெறும் ஐந்து மணி நேரத்தில் 2 லட்சம் லைக்குகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிவிட்டனர்.