என்னை விற்க வேண்டுமா? கூச்சமில்லாமல் விமர்சித்த ரசிகரை அசிங்கப்படுத்திய பிக்பாஸ் அபிராமி

Report
54Shares

பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி. மாடலிங் முடித்தபின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய ஃப்ளாட் பார்ம்மாக அமைந்தது அபிராமிக்கு. இதற்குமுன் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

மாடலிங் என்பதால் சில க்ளாமர் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இப்படி ஒரு நிலையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி சிலர் மோசமாக பதிவுகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டி காட்டமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், வந்தாரை வாழவைக்கும் ஒன்றை இங்கே உள்ளோரை அழ வைக்கும் சுடுகாடு.

மேலும், சமூக வலைத்தளத்தில் இருக்கும் சில முட்டாள்களுக்கு வேறு வேலை கிடையாது. வேறு ஏதாவது வேலை இருந்தால் போய் பாருங்க. நான் வேலைக்கு சென்றாலும் செல்லவில்லை என்றாலும் நான் பார்த்துக்கொள்ள என்னுடைய அம்மாவும் சகோதரரும் இருக்கிறார்கள்.

என்னை விற்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது உங்கள மாதிரி அடுத்தவங்கள அசிங்படுத்தும் உங்களைவிட என்னுடைய மாடலின் விலை எவ்வளவோ கண்ணியமானது என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்து அமைதியாக இருக்கும் நபர்களால் தான் பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.