கவின் மற்றும் லாஸ்லியா, பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டியில் சந்தித்தார்களா? வைரலாகும் புகைப்படம்

Report
2Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4ல், 16 கோடி வாக்குகள் பெற்று நடிகர் ஆரி பட்டத்தை வென்றார். இதையடுத்து போட்டியாளர்கள் பிக்பாஸ் முடிந்த பின்னர் குடும்பத்துடனும், போட்டியாளர்களுடனும் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த பிக்பாஸ் 3ல் காதல் ஜோடிகளாக இருந்த கவின் மற்றும் லாஸ்லியா பற்றி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதாவது பிக்பாஸ் 4ன் சக்ஸ்ஸ் பார்ட்டி பைனல்ஸ் முடிந்ததும் நடைபெற்றுள்ளது. அப்போது கவின் மற்றும் லாஸ்லியாவுடன் பிக்பாஸ் ஆஜித் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார்.

அதை இணையத்திலும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த கவின் லாஸ்லியா ரசிகர்கள் ஜோடி மீண்டும் இணைந்திடுச்சா என்று கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.