இரவு பார்ட்டியில் மதுபோதை! தகாத வார்த்தையில் தகராறு.. நடிகர் விஷ்ணுவை மாட்டிவிட்ட தொழிலதிபர்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் பலரில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். கொரானா லாக்டவுனிற்கு பிறகு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் குடியிருக்கும் குடியிருப்பு இரண்டாம் மாடியில் வசிக்கும் தொழிலதிபர் ரங்க பாபு போலிசில் புகாரளித்துள்ளார்.

நான்கு மாதங்களாக எங்கள் குடியிருப்பு பகுதியில் இரண்டாம் மாடியில் விஷ்ணு வாடகைக்கு இருந்து வருகிறார். அவரது அலுவலகமாகவும் உடற்பயிற்சி கூடமாகவும் பயன்படுத்தி வந்தும் தங்களை பார்க்க வரும் சினிமா பிரபலங்களுடன் இரவு நேரத்தில் மது குடித்தும் அதிக சத்தத்துடன் பாடல்களை வைத்து தொந்தரவு செய்து வருகிறார் என்று தொழிலதிபர் ரங்க பாபு போலிசில் கூறியுள்ளார்.

நேற்று இரவு ஆட்டம் பாட்டத்துடன் இருந்தபோது, தங்களது நான்கு மாத பேரக்குழந்தை தொடர்ச்சியாக அழுததால் விஷ்ணு விஷாலிடம் முறையிட்டதாகவும், ஆனால் அவர் மது போதையில் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதால் 100-க்கு கால் செய்து புகாரளித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் விஷ்ணு விஷாலிடன் செல்போனில் அழைத்து பேசிய போலிசாரிடம் கூறியதாவது, அடுத்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதால் கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டு டயட்டில் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டயட்டில் இருக்கும் ஒரு நபர் எப்படி மது அருந்துவார்? தன்னை இந்த வீட்டை விட்டு காலி செய்ய தொழிலதிபர் குடும்பத்தினர் இதுபோன்று அபாண்டமாக புகார் கூறி வருகிறார்கள்.

கொரோனா காலத்தில் தனது தாய் மற்றும் தந்தைக்கு எந்தவித பிரச்னையும் தன்னால் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தான் இங்கு தங்கியிருப்பதாகவும், சினிமா தொடர்பான நபர்கள் தினமும் தன்னை வந்து சந்திப்பார்கள் என்றும் அப்படி இருக்க தான் எப்படி மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்க இயலும் என்று கூறியுள்ளார்.

சினிமாக்காரன் என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன்னை இந்த குடியிருப்பை விட்டு காலி செய்வதற்காக மட்டுமே அவர்கள் இதுபோன்று நடந்து கொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து, கோட்டூர்புர போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.