ஜூலி இது யாரு உங்க லவ்வரா! தம்பிக்கு கொடுத்த முத்தத்தை கிண்டல் செய்த நெட்டிசன்கள்..

Report
0Shares

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பெரியளவில் வீரத்தமிழச்சி என பெயரெடுத்து பாராட்டை பெற்றவர் ஜூலியானா. இதன்மூலம் பிக்பாஸ் முதல் சீசன் வாய்ப்பு பெற்று கலந்து கொண்டார். பிக்பாஸ் அவருக்கு நல்ல கரியராக இருக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், ஐந்து செகண்ட் வீடியோவால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

பின் பிக்பாஸ் முடிந்து வெளியேறியதும் பல விமர்சனங்களை சந்தித்து கிண்டலுக்கு ஆளானார், தனக்கு வந்த நெகட்டிவ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறார் ஜூலி.

அடிக்கடி வித்தியாசமான போட்டோ ஷூட் எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற ஜூலிக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்தப் படங்களின் முதல் பார்வைக்கு வரவேற்பு இல்லாததால் அனைத்து படங்களும் பாதியில் நிறுத்தப்பட்டது. அதிலும் ஜூலி அம்மனாக நடித்த படம் ஒன்றுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் உச்சகட்டம் தான்.

சரி அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து மீடியாவில் தன் முகத்தை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது போன்று தற்போது இல்லை. மொத்தமும் மாறி வேறு ஆளாக நிற்கிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கடற்கரையில் தன்னுடைய தம்பியுடன் முத்தம் கொடுப்பது போன்று விளையாடி அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை சிலர் இது யாரு ஜூலி லவ்வரா என்று கிண்டல் செய்தும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.