கேத்ரினா-சல்மான் கான் காதல் முறிவுக்கு இந்த நடிகர்தான் காரணமா? தற்கொலைக்கு முயன்றாரா சல்மான்கான்..

Report
0Shares

சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் மத்தியில் பலர் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கம். அந்தவகையில் பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கிடையே பல சர்ச்சைகள் பேசப்பட்டு கிசுகிசுக்கப்படுவதும் உண்டு. அந்தவகையில் முன்னணி நடிகர் நடிகையாக விளங்கியவர், கத்ரினா கைஃப் மற்றும் சல்மான் கான் ஜோடி.

ஆரம்பகாலத்தில் இருவரும் சேர்ந்து நடித்து கொண்டிருக்கும் படத்தின் போது டேட்டிங் இருந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ரன்பீர் கபூருடன் கத்ரீனா காதலில் விழுந்ததால் சல்மான்கானுடன் உறவு முறித்துக் கொண்டார் கத்ரினா கைஃப்.

இதற்கு காரணம், நடிகர் ரன்பீர் கபூருடன் கத்ரீனா ஊட்டி படப்பிடிப்பின்போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் உருவாகியுள்ளது. இதையடுத்து கத்ரீனா சல்மான்கானுக்கு, எல்லாம் முடிந்துவிட்டது. இனி நமக்கு இடையே இருப்பது நட்பு மட்டும் தான்” என்ற குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சல்மான் கான் கோபத்தில் இறந்து போவதாக படப்பிடிப்பு தளத்தில் முடிவெடுத்தார் என்றும், இதனால் கத்ரினா கைஃப் என்ன செய்வது என்று திணறியும் உள்ளார்.

அதையடுத்து, சல்மான் கானின் நண்பர்கள், உறவினர்கள் அறிவுறுத்தலின் பெயரில் அந்த முடிவை கைவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முழு காரணம், ரன்பீர் கபூர் தான் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இப்படி இருந்தப்போதிலும், பல வருட பிரிவுக்கு பிறகு, தற்போது வரை சினிமா துறையில் சல்மான் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் இன்றும் நண்பர்களாக இருக்கிறார்கள்.