திருமணமான கோலத்தில் முரட்டு குத்து பட நடிகை! அதுவும் இயக்குநர் எஸ்ஜே சூர்யாவுடன் எடுத்த புகைப்படம்..

Report
0Shares

சினிமாவில் மாடலிங் முடித்து படவாய்ப்பிற்காக போட்டோஹுட் எடுத்து பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் மாடலிங் முடித்து பல போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ் சினிமாவில், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து படவாய்ப்புகள் கிடைத்த நிலையில், பிக்பாஸ் 2வில் கலந்து கொண்டு க்ளாமர் க்யூனாக வளம் வந்தார். தற்போது எந்த ஆடை போட்டாலும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இதனால் அடுத்தடுத்த படங்களில், அதுவும் சூர்யா, எஸ்ஜே சூர்யா என முன்னணி நடிகர் இயக்குநர் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

தற்போது நடிகரும் இயக்குநருமான எஸ்ஜே சூர்யாவின் அலுவலகத்திற்கு சென்ற யாஷிகா உச்சி நெற்றியில் குங்குமமிட்டு சேலையுடன் வந்துள்ளார். இதை இணையத்தில் ரசிகர்கள் திருமணமாகிவிட்டதா யாஷிகாவிற்கு என்று கேள்வி கேட்டு வருகிறார். ஆனால் சேலை அணிந்ததால் அப்படியாக குங்குமம் இடுவது வழக்கம் என்று யாஷிகா கூறியுள்ளார்.

சமீபத்தில் கூட சனம் செட்டி இப்படியாக பிக்பாஸ் வீட்டில் குங்குமமிட்டு இருந்ததது குறிப்பிட்டுள்ளார்.