விஜே சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கையால் இழுத்தடிக்கும் வழக்கு

Report
0Shares

கடந்த ஆண்டு டிசம்பர் 9ல் சின்னத்திரையை அதிர்ச்சியில் தள்ளியது விஜே சித்ராவின் தற்கொலை. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரித்ததில் கணவர் ஹேமந்த் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்திருந்தார்.

இதன் அடிப்படையில், சித்ராவின் குடும்பத்தினரிடமும், அதன் பின்னர் கணவர் ஹேமந்த், மாமனார், மாமியார், சக நடிகர், நடிகைகள் நெருங்கிய நண்பர்கள், ஓட்டல் ஊழியர்கள், உதவியாளர் ஆனந்த் என 15 பேரிடம் நடைபெற்ற விசாரணை, நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக 15 பேரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ நடத்திய விசாரணையில் 16 பக்கம் கொண்ட அறிக்கையை போலிசாரிடம் ஒப்படைத்துள்ளது.

அதில் சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று வெளியிட்டது. மேலும் தற்போது சித்ரா வழக்கை விசாரித்து வரும் நிபுணர் குழுவினர், சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல் துறை தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் அறிக்கையை கொடுத்துள்ளார்கள்.

இதுதொடர்பாக, வழக்கு விசாரனை வருகிறது பிப்ரவரி 5ற்கு தள்ளி வைத்து உத்திரவிட்டுள்ளது.