என்னை ஏமாற்றிவிட்டார்? சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகை நீலு நஷ்ரீன் ஓப்பன் டாக்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் க்ளாமராக நடிக்க ஒரு சில நடிகைகள் இருக்கிறார்கள். சில காட்சிகளில் வந்தாலும் பிரபலமாகி விடும் ரோலில் நடித்து விடுவார்கள். அந்தவகையில் நடிகர் ஜீவா, சந்தானம் இணைந்து நடித்த படம் தான் சிங்கம் புலி.

இப்படத்தில், இயக்குநர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார். அதாவது படத்தில் க்ளாமர் காட்சிகள் நடித்து அதை பிட்டு பிட்டாக எடுத்து என்ன கதை என்று தெரியாமல் நடித்தேன். நான் நடித்தபோது எனக்கு ஒரு பெண் இருக்கும் அவரையும் என்னையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காண்பித்தார்கள்.வெறும் சைட் அடிக்கும் சீன் தானே என்று நான் எதையும் நினைக்கவில்லை.

ஆனால் , படத்தில் வேறு மாதிரி காண்பித்து விட்டார்கள். அந்த காட்சி வந்தபிறகு தான் இப்படியாக எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். இதனால், என் வீட்டில் நேரடியாக கூறாமால் பின்னால் சென்று விமர்சித்தார்கள்.

இதன் காரணமாக தான் சினிமாவை விட்டு வெளியேறினேன். ஏன் அப்படி சென்றேன் என்று கவலைப்படுகிறேன். இனிமேல் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.