மேக்கப் இல்லாமல் குளோசப்பில் செல்ஃபி! 16 வயதான அஜித்தின் ரீல்மகள் அனிகா வெளியிட்ட புகைப்படம்..

Report
0Shares

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி இளம் நடிகைகளாக பிரபலமாவது இயல்பான ஒன்று. அந்த நிலையில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் குட்டி சிறுமியாக இருப்பவர் அனிகா.

ஜெயம் ரவி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் மகளாக நடித்து பின் அட்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்கள் மூலம் நடித்து புகழ் பெற்றார் அனிகா.

தற்போது 16 வயதான அனிகா, விசுவாசம் படத்திற்கு பிறகுகிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இதற்கு காரணம் அவர் இணையத்தில் வெளியிட்ட போட்டோஹுட் புகைப்படங்கள் தான். இளம் நடிகைகளுக்கு சமமாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

சமீபத்தில் அனிகா முகத்தை போன்று மார்ஃபிங் செய்த வீடியோ வைரலாகி அவரை கஷ்டத்தில் ஆழ்த்தியது. அது நான் கிடையாது என்று அதிகாரபூர்வமாக வீடியோவையும் வெளியிட்டார்.

இந்நிலையில் க்ளோசப்பில் மேக்கப் போடாமல் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்...