ஒரு வருட திருமண வாழ்க்கை! திருமணமாகி 8 மாதத்தில் விவாகரத்து செய்த நடிகை!

Report
0Shares

தமிழ் சினிமாவில் ரா ரா என்ற படத்தின் மூலம் கன்னட பட நடிகையாக களமிரங்கி நடித்தவர் நடிகை சுவேதா பாசு. குழந்தை நட்சத்திரமாக இந்தி படம் ஒன்றில் தேசிய விருதினை பெற்றார். இதையடுத்து இளம் நடிகையாக களமிரங்கி இந்தி, தெலுங்கு, பெங்காளி போன்ற மொழிகளில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த 2014ல் பாலியல் தொழில் செய்ததாக கைது செய்து சர்ச்சையில் சிக்கினார். அதிலிருந்து மீண்டு வந்த சுவேதா, அடுத்தடுத்த இந்தி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த 2018ல் ரோஷித் மிட்டல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019ல் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

திருமண வாழ்க்கையை பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எங்கள் இருவருக்கு திருமண வாழ்க்கை 8 மாதத்தில் முடிந்து விட்டது. அதனால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம்.

ரோஷித்த்துடன் விவாகரத்து பெற்றது பெரிய பிரிவாக கருதவில்லை. சிலர் பத்து வருடங்களுக்கு பிறகு விவாகரத்து பெறுவதை நான் பார்த்திருக்கிறேன். 8 மாதங்களில் முடிந்த திருமண வாழ்க்கை பற்றி மற்றவர்களுக்கு பெரிதாக தெரியலாம், ஆனால் எனகு அதை மோசமாக உணரவில்லை. எனக்கு நானே தோழியாக இருந்து மனதை தேற்றிக்கொண்டேன்.

விவாகரத்திற்கு பின் என் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கொரானா லாக்டவுன் சமயத்தில் மன அழுத்ததில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார் சுவேதா பாசு.