விவசாயிகள் போராடத்திற்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்கள்! சித்தார்த் - வெற்றிமாறன் இப்படியொரு டிவிட்டா?

Report
0Shares

மத்திய அரசின் 3 வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பிரபல பாடகி ரிஹானா, நடிகை மியா கலிஃபா உள்ளிட்டவர்கள் டிவிட் செய்து இருந்தனர்.

இதற்கு இந்திய பிரபலங்களான கங்கனா ராணவத், விராட் கோலி, ரோஷித் சர்மா, சச்சின், சல்மான் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருந்து வருகிறது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அதற்கு நடிகர் சித்தார்த், உங்கள் ஹீரோக்களை நீங்கள் கவனமாக, அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள். கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்து கொள்ளும் தன்மை கண்டிப்பாக தேவை. எந்த நிலைப்பாட்டிலும், எதிலும் குரல் கொடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன், கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும். அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் தான் வழங்கப்படுகிறது.

அரசு மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதாரர்கள் போல செயல்படக் கூடாது. விவசாயிகள் தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். உரிமைக்காக போராடுகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.