அரசியல் நடிகரின் காதலால் நம்பி ஏமாந்த நடிகை! முன்னணி நடிகர் படத்தால் ரூட்டை மாற்றிய நிலை..

Report
0Shares

சினிமாவில் பல நடிகைகள் சக நடிகருடன் சேர்ந்து நடிக்கும் போது லிவ்விங் டு கேதரில் இருந்து பின் ஏமாறுவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில் முன்னணி நடிகை என்ற நிலைக்கு வந்து பின் சில காரணங்களால் பின்னடைவு வந்ததுதான் பிரச்சனையாக முடிந்தது.

அப்படி பாடகியாக இருந்து பின் நடிகையான பின் சவால் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் அந்த நடிகை. இதற்கிடையில் சில சர்ச்சையிலும் சிக்கி தவித்தார்.

ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது என்று தெரிந்தும் அவருடன் எசகுபிசகாக வாழ்ந்து வந்தார் அந்த நடிகை. சமீபகாலமாக அந்த நடிகையை நடிகர் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை போல. திடீரென கோபப்பட்டு அந்த அரசியல் நடிகரின் அனைத்து விஷயங்களையும் அம்பலப்படுத்தி விடுவேன் என ஓபனாகவே தெரிவித்தார்.

அதன்பிறகு ஊமை குத்து விழுந்ததா என்பது தெரியவில்லை. மொத்தத்தையும் புத்தகமாக வெளியிடுகிறேன் என்று கூறியவர் அதன்பிறகு அட்ரஸ் இல்லாமல் ஆகி விட்டார். அவசரப்பட்டு வாய்விட்டு பல நெருக்கடிகளை சந்தித்தாராம் அந்த நடிகை.

இந்நிலையில் தற்போது தன்னுடைய கள்ளக் காதலை மறந்து விட்டு நல்ல முறையாக தமிழ் சினிமாவில் தன்னுடைய கேரியரை மீண்டும் தொடங்கி உள்ளாராம். அப்படித்தான் சமீபத்தில் ஒரு முன்னணி நடிகரின் படம் திரைக்கு வந்தது. ஏன்டா வந்தது என்பது போல் இருந்தது அந்த நடிகையின் கதாபாத்திரம்.

இதனால் அப்செட்டான அந்த நடிகை இனிமேல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் தான் நடிப்பேன் என ரூட்டை மாற்றி விட்டாராம். அந்த வகையில் ஒரு சைக்கோ இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்.