எனக்கு அந்தமாதிரி சம்பவம் நடந்திருக்கு! பல ஆண்டு உண்மையை உடைத்த அனுஷ்கா செட்டி..

Report
0Shares

சினிமாவில் நடிகைகளுக்கு எதிராகவும் படவாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள் என்று பல ஆண்டுகளாகவே நடந்து கொண்டும் விமர்சித்து பேசியும் வருகிறார்கள். அதற்கு எதிராகத்தான் சமீபத்தில் மீடூ அமைப்பு உருவாக்கப்பட்டு சினிமா மட்டுமல்லாது அனைத்து துறை சார்ந்த பாதிக்கப்பட்டவர்கள் அதில் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

அந்தவகையில் எனக்கும் அதுபோல நடந்திருக்கிறது என்று பிரபல நடிகை அனுஷ்கா செட்டி கூறியுள்ளது, அதிர்ச்சியளித்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள அனுஷ்கா, சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் மீ டூவில் புகார் சொல்கிறார்கள். படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன், என்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள். திரைத்துறை கவர்ச்சி மிகுந்தது. அதனால் இங்கு நடப்பது பெரிய விஷயமாக பேசப்படுகிறது.

பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இருக்கிறது. நானும் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த தொல்லையை சந்தித்தேன். ஆனாலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. நான் நேர்மையாக இருக்க கூடியவள் என்பது மற்றவர்களுக்கு புரிய ஆரம்பித்ததும் தொந்தரவுகள் இல்லை.

ஆனாலும் சில கஷ்டங்கள் இருந்தன. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு. தவறான கண்ணோட்டத்தில் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என்று மறுத்து விட்டால் பிறகு அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். நமக்கு மரியாதை தரவும் தொடங்கி விடுவார்கள். என்று கூறியுள்ளார்.

அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகளுக்கே இப்படியாக நடக்கும் நிலையில் இளம்நடிகைகள் குழந்தை நட்சத்திரங்களுக்கு எப்படிலாம் நடந்திருக்குமோ என்று ரசிகர்கள் விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்தும் வருகிறார்கள்.