21 வருடம் கழித்து இந்த கதாபாத்திரத்தில் அஜித் மனைவி ஷாலினி.. வைரலாகும் தகவல்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஆனந்த கும்மி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் குழந்தையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி.

இதையடுத்து நடிகர் அஜித், விஜய்யுடன் ஜோடிபோட்டு நடித்ததில், அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சினிமாவில் நடிக்காமல் குழந்தைகளை பார்த்து வருகிறார் ஷாலினி.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கவுள்ளார் என்று தகவல் வைரலாகியுள்ளது. ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியை தல ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவதோடு, ஷாலினியை வெள்ளித்திரைக்கு வரவேற்று கொண்டிருக்கிறாராம். மணிரத்தினம் இயக்கம் என்பதால் மட்டுமே தல அஜித் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளாராம். தல அஜித்துக்கு ஆஸ்தான இயக்குனர் மணிரத்தினம்.