கழுத்தில் தாலி.. திருமண கோலத்தில் நடிகை நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்

Report
0Shares

தென்னிந்திய சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின் முன்னணி நடிகையாகவும், லேடிசூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை நயன் தாரா. ஆரம்பகாலக்கட்டத்திலும் சரி தற்போது வரை பல கிசுகிசுக்களில் சிக்கி இந்த நிலைக்கு வந்துள்ளார்.

தற்போது பல முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். லாக்டவுனிற்கு பிறகு ஹுட்டிங்கிற்கு சென்று வருகிறார். தற்போது அவர் காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேத்பதி, சமந்தாவுடன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் சிங்கிள் டிராக் வருகிற காதலர் தினத்தன்று வெளியிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்படத்தில் எடுத்து கொண்ட நயன் தாராவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சேலையில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படம் தான் அது.

இதை பார்த்தர் ரசிகர்கள் இது எப்ப நடந்தது என்று ஷாக்காகி வருகிறார்கள்.