25 ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளரிடம் 18 லட்சம் கடன்.. காசு வாங்கி கொடுக்காமல் ஏமாற்றினாரா தல அஜித்?

Report
0Shares

தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு எந்தவொரு உதவியும் யாருடைய சிபாரிசும் இல்லாமல் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். அவரை பற்றி குறை எதுவும் யாரும் சொல்லாமல் இருந்து வந்த நிலையில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித்தின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1996ல் நடிகர் அஜித் என்னிடம் வந்து என் அம்மா, அப்பாவை சிங்கபூர் அழைத்து போக வேண்டும் என 6 லட்சம் பணம் கேட்டார். நானும் அவருக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.

இதையடுத்து நான் தயாரித்த மாண்புமிகு மாணவன் படம் தோல்வியால் அஜித்திடம் சென்று பேசினேன். அப்போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க சொல்லி கூறினேன். 1998 வரை இழித்தடித்து பின் வெடிமுத்து படம் எடுத்த அவள் வருவாளா படத்தில் அஜித்திற்கு 12 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.

இதன்பின் பணம் கேட்க அஜித்திற்கு கால் செய்தால் அவரது மேனேஜர் சமாளித்து விட்டு பேசவிடாமல் மழுப்பி வந்தார். 25 வருடமாக இதை கேட்டும் கொடுக்கவில்லை என்றும் அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார் மாணிக்கம் நாராயணன்.

கடந்த 25 ஆண்டுகளாக அமைதியாக இருந்து தற்போது ஏன் இப்படி பேசுகிறார் என்று சினிமா விமர்சகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அதில் சிலர் நடிகர் அஜித் மாணிக்கம் மகள் திருமணத்திற்கு செல்லவில்லை, அதன்பின் அஜித் - முருகதாஸ் கூட்டணியில் இணைந்து ஒரு படம் எடுக்காமல் கைநழிவியதால் தான் இப்படியாக பேசி வருகிறார் என்று கூறுகிறார்கள்.