பரியேறும் பெருமாள் பட நடிகருக்கு ஏற்பட்ட நிலை! சாப்பிடக் கூட கஷ்டப்படும் பரிதாபம்

Report
0Shares

தமிழ் சினிமாவில் சாதி பற்றிய படங்கள் அதிகளவில் இயக்கிய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படிபட்ட படமாக இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பரியேறும் பெருமாள்.

இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நல்ல நடிப்பை கொடுத்து நடித்திருந்தனர். அதில் கதாநாயகன் கதிருக்கு தந்தையாக நடித்தவர் நாட்டுபுற கலைஞர் தங்கராஜ்.

அவரின் நடிப்பு படத்தில் பெரியளவில் பேசப்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழையால் அவரின் வீடு முழுவதும் சேதமாகிவிட்டது. இதனால் வீட்டினை சீரமைத்து தரும்படி நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்திருந்தார்.

அதன்படி நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார். அவரின் மகளுக்கு கமெக்டர் அலுவலகத்தில் தற்காலிக வேலையை கொடுத்துள்ளார். மேலும் நாட்டுபுற கலைஞர் நடிகர் தங்கராஜ் தினமும் சாப்பிடக்கூட கஷ்டப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.