பட வாய்ப்பு கூட இல்லை! இளம் நடிகைக்கு கோடிக்கணக்கில் குவியும் சொத்துக்கள்..

Report
0Shares

சினிமாவில் நடிகர்கள் மீது கிசுகிசுக்கள் வருகிறதோ இல்லையோ நடிகைகள் மீது அனைத்து பார்வையும் சென்று பேசப்படுவார்கள். அதிலும் சக நடிகருடன் நெருக்கமாக நடிப்பதை கூட தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.

அந்தவகையில் இசையமைப்பாளரின் படத்தின் அவருக்கு நெருக்கமாக நடித்து பிரபலமானவர் தான் அம்மணி. அப்படி படங்களில் நடித்து அப்படங்களுன் ஓரளவிற்கு கூட ஓடவில்லை. சமீபத்தில் கொரானாவில் கூட தனிமையில் வெளியில் சுத்தாமல் இணையத்திலேயே முடங்கி இருந்தார்.

இது ஒரு புறம் இருக்க படங்களும் ஓடவில்லை, வாய்ப்பும் இல்லை ஆனால் விலையுயர்ந்த அப்பார்ட்மெண்டில் கோடிக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்கியுள்ளார்.

தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை சமீப காலமாக காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஹீரோவாக பெரிய அளவு வெற்றியை சுவைக்க முடியாத அந்த நடிகர் தற்போது பிரதேசத்திலும் அக்கட தேசத்தில் சின்ன சின்ன குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போதைக்கு அக்கட தேசத்தில் அந்த நடிகருக்கு நெகட்டிவ் ரோலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் நடிகைக்கு சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லை. ஆனால் சென்னையில் முன்னணி நடிகை ஒருவர் தங்கியிருக்கும் விலையுயர்ந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இந்த மார்க்கெட் இல்லாத இளம் நடிகையும் ஒரு வீடு வாங்கி விட்டாராம்.

இது அந்த முன்னணி நடிகைக்கு சந்தேகத்தை கிளப்பி விட்டதாம். சந்தேகப்பட்டு கொண்டிருக்கும்போதே அருகில் இன்னொரு வீட்டையும் வாங்கிவிட்டாராம் அந்த இளம் நடிகை.

எப்படி வாய்ப்பு இல்லாமல் கோடி கோடியாக சொத்து சேர்த்து வருகிறார் என அந்த முன்னணி நடிகை கிளப்பி விட தற்போது கோலிவுட் வட்டாரங்களில் அந்த இளம் நடிகை மீது தவறான பார்வை ஏற்பட்டு வருகிறதாம்.