கவினுடன் இன்னும் காதலா? ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா!

Report
0Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சி. அதில் கடந்த பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. ஈழப்பெண்ணாக செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் கவினுடன் காதல் ஏற்பட்டு அவரின் தந்தையின் கோபத்தால் கஷ்டப்பட்டார். இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்தபின் லாஸ்லியாவும் கவினும் அவர்களின் வேலைகளில் கவனம் செலுத்தி அதையெல்லாம் மறந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் லாஸ்லியாவிடம் சிலர் கவின் காதல் என்னாச்சு? என்று கேட்டுள்ளனர். அதற்கு, டென்ஷனான லாஸ்லியா, தேவையில்லாத விஷயங்களை கிளற வேண்டாம் எனவும், கவினுக்கு எனக்கும் இருக்கும் விஷயம் எங்கள் தனிப்பட்ட விஷயம் என்றும் ஒரே வார்த்தை கூறி விட்டாராம். இதனால் கவிலியா ஆர்மியே சோகத்தில் இருக்கிறதாம்.

நட்சத்திர ஜோடி ரேஞ்சுக்கு பேசப்பட்டு வந்த கவின் லாஸ்லியா இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.