பணத்தாசையால் மார்க்கெட்டை இழந்த நடிகைகள்.. இந்த வயதான நடிகையுமா!

Report
0Shares

சினிமாவில் பெரும்பாலும் தான் சம்பாதித்த பணத்தை வைத்து தனியாக தொழில் துவங்கி கோடியில் புறளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அது ஒருசிலருக்கு தோல்வியை கொடுத்து மொத்தத்தையும் இழக்க நேரிடும். அந்தவகையில் சில முன்னணி மற்றும் கொடிகட்டி பறந்த நடிகைகள் பற்றிதான் இந்த பதிவு.

பானு பிரியா - பல படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு 90களில் கொடிகட்டி பறந்த நடிகைதான் பானு பிரியா. படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, பானு பிரியாவிற்கு படங்களை தயாரிப்பதற்கான ஆசை வந்துள்ளது. அதனால் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு சில படங்களை தயாரித்துள்ளார்.

அந்த படம் பெரிய அளவில் லாபத்தை சம்பாதித்து கொடுக்காமல் பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளது. இதனால் சினிமாவில் படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் இருந்து விலகியுள்ளார்.

ராதிகா சரத்குமார் - 80, 90களில் கொடிகட்டி முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து பல விருதுகளை வாங்கியவர் ராதிகா சரத்குமார். சமீபத்தில் சீரியல்களில் ஆர்வம் கொண்டும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

சொந்த படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்து பல கோடியை இழந்துள்ளனர். ஆனால் இவர்கள் ராடன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்களை தயாரித்து நஷ்டமடைந்த பணத்தை அனைத்தையும் புத்திசாலித்தனமாக எடுத்துள்ளனர்.

ரம்பா - ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை ரம்பா, சில வருடங்களுக்கு முன் கனடாவில் திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.

படங்களில் நடித்திருக்கும் போது, 2003 ஆம் ஆண்டு 3 ரோசஸ் எனும் படத்தில் நடித்து சொந்தமாக தயாரித்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக படுதோல்வி அடைந்தது ரம்பாவை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தது.

அதன் பிறகு எந்த படத்தையும் தயாரிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் படத்தை நடித்து ஓரளவிற்கு தனது வாழ்க்கையை மீட்டுள்ளார்.

இனிமேல் படம் தயாரிப்பிர்களா என கேட்டாள் நான் தயாரித்த வரைக்கும் போதும் இனிமேல் என்னை அழ விடுங்கள் என கூறி இன்று வரை எந்த படத்தையும் தயாரிக்காமல் அமைதியாகவே இருந்து வருகிறார்.