அண்ணன் தம்பி என்று கூறியது இதைதான்! ஊடகங்கள் திரித்து வெளியிடுகிறது - அமைச்சர் ஜெயகுமார்!

Report
0Shares

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணைய தலைவரிடம் கூறியிருந்தார் தமிழக முதல்வர்.

இது ஒரு பக்கம் இருக்க சசிகலா விடுதலையாகி தமிழகம் வருகை தந்துள்ளார். அவரின் வருகை பிரம்மாண்டமாக இருப்பதை பலர் வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அதிமுகவினர் இதுபற்றி என்ன கூறுவதை ஊடகங்கள் பல தகவல்களை கூறி வருகிறது. சமீபத்தில், அதிமுக உள்கட்சி ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொடுத்து பேசியிருந்தார்.

அதில், கட்சியினரிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளை விட்டு பணியாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அமைச்சர் அண்ணன் தம்பி என்று கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் ‘சசிகலாவுக்கும் திமுகவினருக்கும் பொது எதிரி அதிமுக தான்., எங்களுக்கு பொது எதிரி திமுக. இதனால் சசிகலாவும் தினகரனும் ஒன்றிணைவோம் வா என்று திமுகவை தான் அழைக்கிறார்கள். எங்களுக்கு அல்ல’ என்று அடித்துக் கூறுகிறார்.

மேலும், முதல்வரை சசிகலா சந்திப்பதாக வரும் தகவல் பொய்யானது.அது எந்த ஜென்மத்திலும் நடக்காது.