திருமணத்திற்கு முன் காதலா? வதந்தி குறித்து கடும்கோபத்தில் கயல் ஆனந்தி கூறிய பதில்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் அடித்தால் அப்படத்தினை வைத்து அந்த கலைஞர்களுக்கு பட்டப்பெயராக அமையும். அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் அடித்த படம், கயல். அப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் தான் ஆனந்தி.

இப்படத்தின் மூல கயல் ஆனந்தி என தான் கூறி வருகிறார்கள். சில படங்களில் நடித்து வந்த ஆனந்தி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகை காதல் திருமணம் தான் செய்து கொண்டுள்ளார் என்று வதந்தியை பரப்பினார்.

இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கோபமாக பதிலளித்துள்ளார். அதாவது, என்னுடைய திருமணம் காதல் திருமணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம். காதல் திருமணம் அல்ல. அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன் இஞ்சினியர். மேலும் இணை இயக்குனரும் கூட. விரைவில் அவர் படம் இயக்குவார்.

எனக்கு நாயகியாக வாய்ப்பு தருவார் என காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். கணவர் குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.