தனிமையில் நான் அந்த பழக்கத்திற்கு அடிமை! உண்மையை உடைத்த பிக்பாஸ் நடிகை ஓவியா..

Report
0Shares

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த மலையாள நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஓவியா இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் போதுமான வெற்றி படங்கள் கைக்கொடுக்கவில்லை.

இதனால் சினிமாவைவிட்டு சற்று விலகி இருந்த நிலையில் பிக்பாஸ் வாய்ப்பு பெற்று முதல் சீசனில் மன அழுத்தம் காரணமாக வெளியேறிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் அவரின் நடத்தை ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று கவர்ந்திழுத்தார்.

இதையடுத்து சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியில் முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் என்றாலே அழுது கொண்டு சோக வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? நான் ஆடையை துறந்து நடிக்கவில்லை.

ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதைக் கொடுப்பது என் கடமை. உடை அணிவது பெண்களின் சுதந்திரம் என்றும் அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது என்று சமுகவலைத்தளத்தில் விளாசி பேசியிருந்தார்.

இதையடுத்து சமீபத்துல் தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஓவியா. பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பிருந்தே எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. தனிமையில் இருக்கும் போது புகை பிடிப்பதை பழக்கமாக கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் அதன்மூலம் சில உடல் பிரச்சனைகளை சந்தித்ததால் புகை பிடித்தால் என்ன ஆகும் என்பதைப் பார்த்ததில் இருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் சமீபத்தில் அவர் நடித்த 90எம் எல் படத்தில் புகை மது என குடித்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.