இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்! திருமணத்திற்கு பின் கூறிய உண்மை..

Report
0Shares

தென்னிந்திய சினிமாவில் சுமார் 10 வருடங்களில் முன்னணி நடிகையாகவும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் பழனி படத்தில் ஆரம்பித்த சினிமா கரியர் தற்போது முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட்டில் கோடிகணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹனிமூன் முடித்தபின் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். திருமணத்திற்கு முன் நடித்த படங்களையும் முடித்துவிட்டு அதன் பிரோமஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

காஜல் அகர்வாலுக்கு சிறுவயதிலிருந்தே உடம்பில் ஒரு பிரச்சனை இருக்கிறதாம். சிறுவயதில் பயணம் செய்யும் போது தூசி மற்றும் புகை ஆகியவற்றின் காரணமாக தனக்கு அடிக்கடி ஆஸ்துமா பிரச்சனை ஏற்படும் எனவும், அதற்காக இன்ஹேலர் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர் பொதுவெளியில் இன்ஹேலர் பயன்படுத்துவதற்கு சங்கடபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார், அப்படி சங்கடப்பட தேவையில்லை எனவும், நம் உடலின் ஆரோக்கியம் தான் முக்கியம் என ஆஸ்துமா நோயாளிகளுக்கு சப்போர்ட் செய்துள்ளார்.