காதல் தோல்வி! நடிகை அம்மாவின் செயலால் மனதளவில் கஷ்டப்பட்ட தல அஜித்? இதுதான் காரணம்!

Report
0Shares

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். பல லட்ச ரசிகர்களை கொண்டு இருப்பவர். சமீபத்தில் நேர்கொண்ட பார்வை, விசுவாசம் படங்கள் பெரியளவில் வெற்றியையும் நல்ல வரவேற்பு வசூலையும் பெற்றது. இப்படியிருக்க அஜித் பற்றிய சில கிசுகிசுக்களும் ஆரம்ப காலகட்டத்தில் எழுந்தது.

எந்த படத்தில் நடித்தாலும் அவருடன் வதந்திகளுக்கு உட்பட்டவராகி விடுவார். அந்தவகையில் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானார். இதையடுத்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் நடிகர் அஜித்தின் சதி லீலாவதி படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து படு க்ளாமராக நடித்தார்.

இப்படத்தின் மூலம் அஜித்திற்கும் ஹீராவிற்கும் காதல் ஏற்பட்டு பல கிசுகிசுக்களும் கிளம்பியது. இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சில காரணங்களால் அஜித் ஹீராவினை ஒதுக்கியதாகவும் அவரே சில பேட்டிகளில் கூறியிருந்தார்.

ஆனால், அதன் உண்மையான காரணம் அவரின் தாய் தானாம். அஜித் சதீ லீலாவதி படத்திற்கு பிறகு ஹீராவிற்கு தினமும் காதல் கடிதம் கொடுத்தும் வந்துள்ளார். இதையடுத்து நடிகை ஹீராவின் அம்மாவை சந்தித்தும் பேசியுள்ளார்.

ஆனால் ஹீராவின் தாயார், இப்போது என் மகளுக்கு திருமணம் செய்யவிருப்பமில்லை. இதனால் அவரின் மார்க்கெட் குறைந்து விடும். என்று கூறியுள்ளார். இதனால் அஜித் சில நாட்களாக ஹீராவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் மன அழுத்தத்தில் இருந்துள்ளாராம்.

இந்த சர்ச்சையால் ஹீராவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும் செய்தி வெளியானது.

ஹீரா கடைசியாக சூர்யவம்சம் படத்தில் நடித்த பின் சினிமாவில் இருந்து விலகி புஷ்கர் மாதவ் என்பவரை கடந்த 2002ல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் பெற்று தனிமையில் என்.ஜி.ஒ உதவி மையத்தை பராமரித்து வருகிறார்.