பிரபல நடிகருடன் லிவிங் டுகெதரில் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்! ரகசியத்தை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக கொடிகட்டி பறப்பவர்களில் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் 7ஆம் அறிவு, 3 போன்ற படங்கள் மூலம் பிரபலமாகினார் ஸ்ருதி.

இதையடுத்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். க்ளாமருக்கு எந்தவொரு தடையும் போடாமல் ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு ஆடைகளை அணிந்து நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க சில கிசுகிசுக்களிலும் சிக்கி வந்தார். அந்தவகையில் வெளிநாட்டு நபரை காதலித்து பின் காதல் தோல்வியை சந்தித்து பாடலில் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சமீபத்தில் மீண்டும் பிரபல டூடுல் கலைஞருடன் காதலில் விழுந்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகுவதற்கு முன்பே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ருதி ஹாசன். அப்போது சித்தார்த்துடன் நட்பாக பழகி பின்னர் காதலில் விழுந்தாராம். காதல் மோகத்தில் இருவரும் நீண்ட நாட்கள் லிவிங் டுகெதர் முறையில் ஒரே அப்பார்ட்மென்டில் வசித்து வந்தார்களாம்.

முன்னதாக சித்தார்த் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக ஏற்கனவே சில வதந்திகள் கோலிவுட் வட்டாரங்களில் உலா வந்தது.

இந்நிலையில், சித்தார்த் ஸ்ருதிஹாசனுடன் இருந்ததை பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியுப் வீடியோவில் ஓப்பனாக கூறியுள்ளார். ஆனால் இது எந்தளவிற்கு அவர் உண்மையாக கூறியிருப்பார் என்று உறுதியாகவில்லை.

இதுபோல் பல நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் உறவு அவர்களின் குணத்தை பற்றி பயில்வான் அவர்கள் வெளிப்படையாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.