இரண்டே ரெண்டு படம்! சிம்பு பட நடிகைக்கு கோயில்கட்டி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்!

Report
0Shares

சினிமாவில் நடிகர்களை போலவே நடிகைகளுக்கு பெருமளவில் ரசிகர்கள் குவிந்து இருப்பார்கள். அந்தவகையில் மிகவும் பிடித்தமான நடிகைகளின் பெயரை டேட்டூ குத்தியும், பேணர் அடித்தும் கொண்டாடுவார்கள்.

அந்தவகையில் குஷ்பு, நயன் தாராவிற்கு மட்டும் தான் தமிழ் சினிமாவில் சிலை வைத்து பாலாபிஷேகம் செய்தனர். அந்தவரிசையில் தெலுங்கு நடிகைக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் கோவில் வைத்து கும்பிட்டு வருகிறார்கள்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக பிரபலமானவர் நித்தி அகர்வால். தெலுங்கில் இருந்து சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி படத்தில் அறிமுகமாகினார். இதையடுத்து இளம் நடிகர்கள் படத்தில் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன.