நடிகை வடிவுகரசி சினிமாவில் இருந்து காணாமல் போக சூப்பர் ஸ்டார் தான் காரணமா? ரசிகரின் விபரீத முடிவு..

Report
0Shares

முன்னணி நடிகைகள் பலர் தற்போது வயதாகி சின்னத்திரை சீரியல்களில் அம்மா பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் குணச்சித்திர கதாபத்திரத்தில் தற்போது வரை சினிமாவிலும் சீரியலிலும் நடித்து வருபவர் நடிகை வடிவுக்கரசி.

80, 90களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்றார். தற்போது 60 வயதான நிலையில், 350க்கும் மேற்பட்ட படங்களிலும், 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அப்படி ஹிட் அடித்த படத்தின் நடிகரின் ரசிகரால் தலைமறைவானார். சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் அருணாச்சலம். இப்படத்தில் வடிவுக்கரசி வேதவல்லி என்னும் வில்லத்தனமான பாட்டியாக நடித்திருப்பார்.

இப்படத்தில் ரஜினியை பார்த்து இவர் ஆனாத பயலே எனும் கூறும் போது வடிவுக்கரசி நடிப்பை பார்த்து ரஜினியே மிகவும் பாராட்டி கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார். ரஜினியிடம் பாராட்டு வாங்கிய வடிவுக்கரசி ரசிகர்களிடம் திட்டு வாங்கி கொண்டார்.

இந்த படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற போது வடிவுக்கரசி கூறிய வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ரயிலில் பயணம் செய்வதற்காக வடிவுக்கரசி சென்றுள்ளார். வடிவுக்கரசி ரயிலில் இருந்ததை பார்த்த ரசிகர் ஒருவர் உடனே ஓடிச்சென்று ரயில் தண்டவாளத்தில் நடுவில் படுத்து உள்ளார்.

பின்பு நான் தண்டவாளத்தை விட்டு எழுந்து வர வேண்டும் என்றால் என்னுடைய தலைவனை பற்றி தவறாக அனாதை பயலே என வடிவுக்கரசி பேசியதற்கு மன்னிப்புக் கூறவேண்டும் எனக் கூறியுள்ளார்.

பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் வடிவுக்கரசி தன்னால் ரயிலில் இருக்கும் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக நான் படத்தில் பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 30 நாட்களுக்கு மேல் தலைமறைவாக வாழ்ந்துள்ளார்.

இதனை வடிவுக்கரசி ஒரு பேட்டியில் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார், இந்தத் தகவலைக் கேட்டு கோலிவுட்டே பூகம்பம் போல் ஆடியுள்ளது.