திருமணமாகாமல் 30 வயது நடிகருடன் தொடர்பிற்கு பிறகு பிரேக்கப்! 45 வயதான நடிகை செய்த செயல்..

Report
0Shares

சினிமா நடிகைகள் தற்போதைய காலத்திற்கேற்ப தன்னைவிட குறைவான நடிகருடன் தான் தொடர்பில் இருந்தும் திருமணமும் செய்து கொண்டு வருகிறார்கள். அதற்கு ஹாலிவுட் நடிகைகளுக்கு அடுத்ததாக இருப்பது பாலிவுட் நடிகைகள் தான். அப்படியான காதலில் விழுந்திருந்தார் நடிகை சுஷ்மிதா சென்.

ரட்சகன் படத்தில் மூலம் அறிமுகமாகி பின் முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் போட்டு வந்தார். இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், இளம் நடிகருடன் சில ஆண்டுகளாக திருமணமாகாமல் தொடர்பில் இருந்தும் டேட்டிங் செய்தும் வந்துள்ளார். தற்போது சுஷ்மிதா சென்னுக்கு 45 வயதைத் தாண்டிவிட்டது. இந்த வயதிலும் தன்னைவிட 15 வயது குறைவான ரெஹ்மான் ஷால் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சுஷ்மிதா சென் மற்றும் ரெஹ்மான் ஷால் இருவருக்குமிடையே இருந்த காதல் முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. இருவரும் சேர்ந்து கொண்டு சமூக வலைதளங்களில் யோகா செய்கிறேன் என்ற பெயரில் நெருக்கமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பி வந்தனர்.

கடந்த சில மாதங்களாகவே இருவரும் மாறி மாறி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி போஸ்ட் வெளியிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயதுதான் 45, ஆனால் இன்னமும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் படங்களில் நெருக்கமான காட்சிகளிலும் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் சுஷ்மிதா சென்.

இருவரும் பிரேக்கப் செய்து கொண்டார்கள் என்பது உண்மையான தகவல் உறுதியாகவில்லை. பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.