நடிகை ஓவியாவை விலைக்கு வாங்கிய கட்சி! மோடி பற்றிய டிவிட்டிற்கு நடிகை காயத்ரி கோபம்

Report
0Shares

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. சில படங்களில் நடித்திருந்தாலும் செட்டாகாமல் இருந்த ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையடுத்து படங்களில் நடித்து வரும் ஓவியா டிவிட்டர் பக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு சில டிவிட்களை பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் #GoBackModi என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி சர்ச்சை பதிவினை வெளியிட்டார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை எதிர்த்து இந்த ஹேஷ்டாக்குகள் பயன்படுத்தி வரும் நெட்டிசன்களை அடுத்து நடிகை ஓவியா தற்போது பயன்படுத்தியுள்ளார்.

இதற்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் பலர் அவருக்கு எதிராக புகாரளித்து வழக்கு பதிவும் செய்துள்ளனர். ஓவியாவின் இந்த டிவிட்டிற்கு நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம் ஓவியாவை திட்டி பதிவினை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், #வாயை_ மூடு_போடி சும்மா ரைமிங். உன்னை மரியாதை குறைவாக எதுவும் பேசவில்லை. பிக் பாஸில் உனக்கு எதிராக தான் இருந்தேன். ஆனால், நான் சரியானதை தேர்வு இருந்தேன். இருக்கிறேன். என்று பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், ஓவியாவை திமுக கட்சியினர் விலைக்கு வாங்கி இருப்பதாகவும் கூறி பதிவிட்டுள்ளார்.

இதற்கு பலர் ஆதரவும் எதிர்ப்பு கருத்துக்களும் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.