பிறந்தநாள் பார்ட்டி புகைப்படத்தால் வதந்தி! கீர்த்தி சுரேஷ் அனிருத் காதல் வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த தந்தை

தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னி நடிகையாக குறுகிய காலகட்டத்தில் களம் கண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதேபோல் தென்னிந்திய சினிமாவின் ராக்ஸ்டார் என்று அழைக்கபடுபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத் பிறந்த நாளுக்கு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதேபோல் அனிருத்தும் கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளுக்கு புகைப்படத்தோடு வாழ்த்தும் தெரிவித்தார். இதனால் இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்று வதந்தி செய்தியாக இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில் இது பற்றி நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது, இதுபற்றி வெளியாகும் தகவல் பொய்யானது அது முற்றிலும் உண்மை இல்லை என்றும், 3வது முறையாக இப்படியான காதல் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.