6 லட்சத்தை தூக்கிச்சென்ற காஞ்சனா 3 பட நடிகை! ஷாக்காகும் பிக்பாஸ் ரசிகர்கள்..

Report
0Shares

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் ஆரம்பித்து தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஆரம்பித்து வெற்றியை கண்டு வருகிறது.

தற்போது இந்தியில் பிக்பாஸ் 14 சீசன் ஆரம்பித்து கடைசி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்தி பிக்பாஸில் க்ளாமர் தாண்டி காதல், கவர்ச்சி, நெருக்கம் என அனைத்திலும் தாராளமாக காட்டி வருவார்கள்.

இறுதிகட்ட போட்டியில் பிக்பாஸ் கொடுக்கும் பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே இருந்து வந்தது. அதை நடிகை நிக்கி டம்போலி எடுத்து சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியது.

தமிழில் ராகவா லாரண்ஸ் நடித்த காஞ்சனா 3 படத்தில் அத்தை பெண்ணாக நடித்த ஓவியா, வேதிகாவிற்கு அடுத்த பெண்ணாக நடித்தவர் தான் நிக்கி டம்போலி.

தன்னுடைய கவர்ச்சியால் பிக்பாஸ் வீட்டியில் இருந்து வந்த நிக்கி டம்போலி பிக்பாஸ் கொடுத்த 6 லட்ச ரூபாயை எடுத்து வெளியேறியுள்ளாராம். இதுபற்றி அதிகார புகைப்படமும் பிரமோவும் வரவில்லை.