
கடந்த ஆண்டு இந்திய சினிமாவையே அதிரவைத்த நிகழ்வு நடிகர் சுஷாந்த் சிங் ராக்புட்டின் தற்கொலை சம்பவம். தற்கொலை என்ன காரணம் என்று இதுவரையில் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் இது தொடர்பாக பலர் மீது பல சர்ச்சைகள் அம்பலமாகியது.
இந்நிலையில் சுஷாந்தை தொடர்ந்து தோனி வாழ்க்கை படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனி படத்தில் சுஷாந்தின் நண்பராக நடித்தவர் சந்தீப் நஹர். மும்பை வசித்து வரும் சந்தீப் திருமணமாகி கோரேகான் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.
தற்கொலைக்கு முன்னதாக சந்தீப் நஹர் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது இறுக்கமான மனநிலை குறித்து வீடியோ ஒன்றும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், தொழில்முறை மற்றும் செய்துள்ளார்.
பிரச்சினைகள், குறிப்பாக அவரது சிக்கலான திருமணம் பற்றி பேசினார். ஆனால், அதே வேளையில் தனது மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
RIP Sandeep nahar MS DHONI actor 🙏🙏 video before suicide. #sandeepnahar #SushantSinghRajput pic.twitter.com/wmhVCu2686
— Vikas Singh (@vikasyadav1192) February 15, 2021