நயன்தாராவிற்கு நோ! திரிஷாவிற்கு ஓகே! சிம்புவை வைத்து VTV-படத்தைவிட ரொமான்ஸில் அள்ளப்போகும் இயக்குநர்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவும் வாரிசு நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகர் சிம்பு. ஆரம்ப காலத்தில் துருதுருவென இருக்கும் சிம்பு வயதாக பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.

வல்லவன் படத்தில் நடிக்கும் நடிகை நயன் தாராவுடன் காதல் ஏற்பட்டு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து இருவரும் படங்களில் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர். இதையடுத்து நடிகை த்ரிஷாவுடன் வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடி சேர்ந்தார்.

ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு சில ஆண்டுகள் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு உடல் எடையை குறைத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் , மாநாடு படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது அதனைத் தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் கூட்டணியில் சிம்பு இணைந்தது ரசிகர்களிடையே குத்தாட்டம் போட வைத்தது.

மேலும் அந்த படத்தில் சிம்புவின் முன்னாள் காதலி நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. தற்போது அது சம்பந்தமாக தயாரிப்பு தரப்பு நயன்தாராவிடம் பேசியபோது நயன்தாரா இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் பழைய குருடி கதவை திறடி என மீண்டும் கௌதம் மேனன் திரிஷா வசம் தஞ்சம் அடைந்துள்ளாராம்.

சிம்பு மற்றும் திரிஷா கூட்டணியில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ? என ஏற்கனவே ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ள நிலையில் திரிஷாவை கேட்டதிலிருந்து அது கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

இருந்தாலும் கௌதம் மேனன் தரப்பில் இது விண்ணைத்தாண்டி வருவாயா 2 இல்லை எனவும் புதுமாதிரியான ஸ்கிரிப்ட் எனவும் கூறி வருகிறாராம். எது எப்படியோ, கௌதம் மேனனும் சிம்புவும் கம்பேக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என இப்போதே கோலிவுட்டில் டாக் அதிகமாகிவிட்டதாம்.