என்னுடைய அந்த உறுப்பு உடைந்துவிட்டது! நடிகை மாளவிகாவிற்கு ஏற்பட்ட பரிதாபம்! வைரல் புகைப்படம்..

Report
0Shares

சினிமாவில் வயதிற்கு ஏற்ப மட்டும் தான் தங்களின் மார்க்கெட் அமையும் என்பதற்காக திருமணத்தை தள்ளிபோட்டு படங்களில் கவனம் செலுத்தி வருவார்கள். அப்படி, தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை மாளவிகா. இவர் உன்னை கொடு என்னை தருவேன், ஆனந்த பூங்காற்றே ஆகிய படத்தில் அறிமுகமாகி நடித்தவர்.

பல படங்களில் நாயகியாகவும் நடித்து வந்தவர். 2007ல் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சில படங்களில் நடித்து வந்தார். தற்போது 40 வயதாகும் நடிகை மாளவிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து சில க்ளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், நேற்று சைக்கிளிங் செல்லும் போது விபத்திற்குள்ளாகி உடலில் சில இடங்களில் காயம் அடைந்துள்ளார் மாளவிகா. “என்னுடைய, கை விரல் உடைந்து விட்டது.

நான் ஒரு போர் வீராங்கனை. மீண்டும் திரும்பி வருவேன்” என்று கூறி அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.