
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகவும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்க கொஞ்சம் அதிர்ஷ்டம் அடித்தால் தான் உண்டு. அப்படி மாஸ்டர் படவாய்ப்பு மூலம் தென்னிந்திய சினிமாவை தாண்டி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
தமிழில் பேட்ட படத்தில் நடிகர் ரஜினி காந்திற்கு தங்கையாக நடித்து அறிமுகமானார். இதையடுத்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கமிட்டாகிய அடுத்த நாள் முதல் பெரிதும் பேசப்படும் நடிகையாக வளம் வந்தார். ஒரு வருடம் கழித்து வெளியான மாஸ்டர் படம் நல்லவரவேற்பும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
ஆனால், படத்தில் மாளவிகாவின் கதாபாத்திரம் சரியாக எடுபடவில்லை என்று கிண்டலடித்தனர் நெட்டிசன்கள். இதையடுத்து தனுஷின் அடுத்த படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் மாளவிகா.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா க்ளாமரில் தாராளம் காட்டும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளர்ச்சியை தூண்டி வருவார். சமீபத்தில் சேலையில் இப்படிக்கூட கவர்ச்சி காட்டி சேலை அணியலாம் என்று காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.