30 வருடங்களாக விவேக்கை ஒதுக்கி வைத்திருக்கும் நடிகர் கமல்! இதுதான் காரணமா?

Report
0Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலக நாயகனாகவும் இருந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். 60 ஆண்டுகளுக்கும் மேல் குழ்ந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல சாதனைகளையும் விருதுகளையும் பெற்று பெருமை சேர்த்தவர்.

இவர் படத்தில் நடிக்க பல நட்சத்திரங்கள் காத்திருக்கும் நிலையில் ஒரு கதாபாத்திரமாவது கிடைக்காத என்று ஏங்குவார்கள். அந்தவகையில், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியர் நடிகர் விவேக்.

ஆனால், கமலஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை. சில படங்கள் வாய்ப்பு வந்தும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கைவிட்டு சென்றதாக தகவல்.

இந்நிலையில் கடைசியாக இந்தியன் 2 படத்தில் விவேக் ஒப்பந்தமாகி நடித்து வந்ததாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இந்தியன் 2 படம் வருமா? வராதா? என்ற இழுபறியில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையா? பொய்யா? என்பது தெரியவில்லை.

ஒருவேளை விவேக் கருத்து காமெடியனாக இருந்ததால் கமல்ஹாசன் ஒதுக்கி விட்டாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கமலஹாசன் நினைத்திருந்தால் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தது போல விவேக்கிற்கு கொடுத்திருக்கலாம்.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் விவேக்கிற்கு கடைசிவரை கமல் படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. இத்தனைக்கும் கமலின் ஆஸ்தான குருவான கே பாலச்சந்தரின் விருப்பமான பிரபலங்களில் விவேக் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.