அப்படிபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன்! கண்டீஷன் போடும் சூர்யா மனைவி ஜோதிகா

Report
0Shares

தமிழ் சினிமாவில் ஜோடியாக நடித்து பின் திருமணம் செய்த பிரபலங்கள் வரிசையில் இருப்பவர்கள் நடிகர் சூர்யா - ஜோதிகா. பல படங்களில் இருவரும் ஜோடியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் 36 வயதினிலே படத்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து பல படங்களில் பெண்களை சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்தும் தேர்வு செய்தும் வருகிறார்.

தற்போது மாற்றுதிறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கண்டீஷன் போட்டுள்ளாராம். அதற்கு காரணம் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘மொழி’ படத்தில் ஜோதிகா மாற்றுத்திறனாளியாக நடித்தது தான், ஜோதிகா செய்த மிகப்பெரிய தவறு என்று அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் தற்போது உண்மையை உடைத்து கூறியுள்ளாராம்.

ஆகையால் ஜோதிகா, தன்னை அணுகும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ‘இனிமேல் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன்’ என்று கறாராக கூறி வருகிறாராம்.

இருப்பினும் மொழி திரைப்படமானது வசூல் ரீதியாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.