அஜித்தின் இந்தபடத்தில் ஜோடியாக ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஜோதிகா இல்லையாம்! தளபதி நடிகையை ஓரங்கட்டிய இயக்குநர்

Report
0Shares

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். தல என்று ரசிகர்களால் கூறப்படும் அஜித்தின் படத்தில் நடிக்க பலர் ஆர்வமாக இருப்பார்கள். அந்தவகையில் 200 ஆம் ஆண்டில் இயக்குநர் துரை இயக்கத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை ஜோதிகா நடித்திருப்பார்.

ஆனால் முதலில் நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்படவில்லையா. இதுபற்றி, ஜோதிகா கதாநாயகியாக எப்படி வந்தார் என்ற சீக்ரெட்டை தற்போது இயக்குநர் துரை உடைத்துள்ளார். அதாவது நெஞ்சினிலே படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த இஷா கோப்பிகர் தான் முதல் முதலாக முகவரி படத்திற்கு ஹீரோயினாக கமிட்டானாராம்.

அதன்பிறகு இஷா கோப்பிகர் முகவரி படத்திற்காக நான்கு நாட்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று உள்ளாராம். பிறகுதான் அந்த கதாபாத்திரத்திற்கும் இஷா கோப்பிகருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்பதால், கதாநாயகியை மாற்ற வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் துரை.

அதன்பின் ஜோதிகாவை வைத்து முகவரி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை பார்த்த தயாரிப்பாளர், ‘இயக்குனர் துரையின் முடிவு சரிதான்’ என்று பாராட்டினாராம். ஏனென்றால் ஜோதிகா முகவரி படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டினார் என்பதை அடித்துக் கூறலாம்.