கேன்சர் நோயால் அவதிப்படும் நடிகை! உதவிகேட்ட நடிகை சனம்செட்டி! கேள்விகேட்டு அசிங்படுத்திய நெட்டிசன்கள்..

Report
0Shares

மாடலிங் முடித்துவிட்டு ஒருசில படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை சனம் செட்டி. சமீபத்தில் பிக்பாஸ் தர்ஷனை காதலித்து வருவதாகவும் பின் பிரிந்து என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார் என்று புகாரும் அளித்தார்.

இதையடுத்து பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு வெளியேறினார். சனம் செட்டி வெளியேறியது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசி ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், அங்காடித்தெரு படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்த சிந்து தற்போது கேன்சர் நோயால் அவதியுற்று வருகிறார். அதற்காக, சிந்துவுக்கு உதவி செய்யுமாறு நடிகை சனம் செட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஏனென்றால் சிந்து கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக போதிய பணம் இல்லாததால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே சிந்துவுக்கு உதவும் நோக்கத்தில் நிதி திரட்ட சமூகவலைதளங்களில் முடிவு செய்துள்ள சனம் ஷெட்டியை பலரும் பாராட்டி வந்த நிலையில்,

ஒரு ரசிகர் மட்டும் ‘உங்களால் உதவி செய்ய முடியும் தானே, மொத்த தொகையையும் நீங்கள் மட்டுமே கொடுத்து விடலாமே?’ என்ற கேள்வியை எழுப்பி சனம் சட்டியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி, ‘நானும் உதவியிருக்கிறேன். அதன் விவரத்தை இங்கே தெரிவிக்கும் அவசியம் இல்லை, முடிந்தால் உதவி செய்யுங்கள்’ என்று கோபத்துடன் பதிலளித்துள்ளார்.