ரம்யா பாண்டியனை பிரித்து பிக்பாஸ் சோமை ஷிவானியுடன் கோர்த்துவிட்ட அர்ச்சனா! வைரலாகும் வீடியோ..

Report
0Shares

கடந்த மாதம் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் 4 சீசன் இறுதி போட்டி நிறைவுற்று வெற்றியாளராக 16 கோடி வாக்குகளுடன் நடிகர் ஆரி கைப்பற்றினார். தற்போது போட்டியாளர்கள் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ரம்யா பாண்டியனுடன் காதலில் இருப்பதாக சோமை வைத்து பேசப்பட்டது. அதை வெளியில் வந்தும் நிகழ்ச்சியில் கவர் செய்யதாம் சாக்லேக் கவர் கொடுத்தேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் சோம்.

இதையடுத்து சமீபத்தில் சோம், அர்ச்சனா, கேபி, சுரேஷ், ஷிவானி, அனிதா ஆறு பேரும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி சென்றுள்ளனர்.

அங்கு ஒரு டாஸ்க்கில் ஷிவானியையும், சோமையும் ரொமான்ஸ் செய்ய வைத்துள்ளார் அர்ச்சனா. அர்ச்சனா சோம் மற்றும் ஷிவானியை சேர்த்து வைக்க முயற்சி செய்ததை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.