விவாகரத்துக்கு ஷிவானியின் காதல்தான் காரணமா? புலம்பி தள்ளும் 30 வயது நடிகர்..

Report
0Shares

தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல் மூலம் அறிமுகமாகி பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இதையடுத்து, பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு கடைசி 5 போட்டியாளர்களில் கடைசி இடத்தினை பிடித்தார். இதற்கிடையில் பிக்பாஸ் பாலாஜியுடன் காதல் சர்ச்சையில் சிக்கி அவரின் தாயிடன் திட்டு வாங்கினார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சீரியல் நடிகர் ஆசீமுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி வைரலானது. அசீம் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்தும் ஷிவானி அவருடன் நெருக்கமாக பழகினார்.

தற்போது ஆசீம் அவரது மனைவியை விவாகரத்து செய்ததாக அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தார். இதற்கு காரணம் ஷிவானியால் அடிக்கடி அவரது மனைவியிடம் சண்டை போட்டதாகவும் அதனால் தான் பிரிந்தனர் என்றும் கூறப்பட்டது.

ஆசீம் அதை முற்றிலும் மறுத்துள்ளார். எனக்கும் என் மனைவிக்கும் சொந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் விவாகரத்து நடை பெற்றது எனவும், சிவானிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிவானி மற்றும் என்னையும் நிம்மதியாக வாழ விடுங்கள் எனவும் சமூகவலைதளத்தில் வாயிலாக ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் அசீம்.

அசீம் முதலில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கலந்துகொள்ள இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற காரணம் தற்போது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.