அனிருத்துடன் காதல் சர்ச்சை! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..

Report
0Shares

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகையாகவும் முன்னேறுவது சகஜமான ஒன்றல்ல. முன்னணி நடிகர்களுக்கு ஜோடிபோட்டு கோடிகளில் சம்பளம் வாங்கி புறளும் நீண்ட ஆண்டுகள் எடுக்கும். அதை உடைத்தெரிந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கடந்த ஆண்டு தேசிய விருதினையும் பெற்று புகழ் பெற்றார். வாரிசு நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்களின் படத்தில் தற்போது வரை மார்க்கெட் குறையாமல் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அனிருத் இடையே நெருக்கம் அதிகரிப்பதாக் காதல் வதந்திகள் பரவியது. பிறந்த நாளுக்கு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இருவரும் இந்த கிசுகிசுக்களில் சிக்கி வந்தனர். இதனை கீர்த்தி சுரேஷின் தந்தை முற்றிலும் மறுத்து கூறியுள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது அம்மா நடிகை மேனகா, கீர்த்தி சுரேஷுக்கு மருதாணி வைத்து விடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, இது தான் உண்மையான காதல் என தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாக கிளம்பிய சர்ச்சைக்கு சத்தமில்லாமல் முற்றுப்புள்ளி வைத்ததாக கூறுகின்றனர்.